“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

By Muthu Mani on வைகாசி 5, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ள விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு குடும்பங்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இந்தச் சகோதரிகள், தங்களது தற்போதைய வாழ்க்கை துணைகளுடன் ஒத்துப்போகவில்லை எனக் கூறி, அக்கா தங்கையின் கணவருடனும், தங்கை அக்காவின் கணவருடனும் இணைந்து வாழ விரும்புவதாக ஒரு வினோதமான முடிவை எடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்கள் என நான்கு பேருமே இந்த “கணவர் எக்ஸ்சேஞ்ச்” திட்டத்திற்குப் பரிபூரண சம்மதம் தெரிவித்துள்ளனர். வழக்கமான விவாகரத்து நடைமுறைகள் காலதாமதமாகும் என்பதால், ஒப்பந்த அடிப்படையில் தங்களது துணைகளை மாற்றிக்கொள்ள அனுமதி கோரி அவர்கள் குவாலியர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இது பண்டமாற்று முறை அல்ல என்றும், தங்களது தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்படுகிறது.

   

இருப்பினும், இந்தியத் திருமணச் சட்டம் 1955-ன் படி, முறையான விவாகரத்து பெறாமல் துணையை மாற்றிக்கொள்வது கடுமையான கிரிமினல் குற்றமாகும். “திருமணம் என்பது நுகர்வோர் சந்தையில் நடக்கும் பண்டமாற்று முறை அல்ல” என்று சட்ட வல்லுநர்கள் இந்த மனுவிற்குத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நான்கு பேரின் சம்மதம் இருந்தாலும், சமூக ஒழுங்குமுறைக்கும் சட்ட விதிகளுக்கும் எதிராக இப்படி ஒரு வினோத முடிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

   

தனிமனித சுதந்திரமா அல்லது சமூகக் கட்டமைப்பா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ள நிலையில், இந்த மனு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரின் உறவுச் சிக்கல்களையும் சட்டத்தின் மீதான அவர்களின் பார்வையையும் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த வழக்கில், குவாலியர் உயர் நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. உறவுகளின் புனிதத்தைச் சட்டம் நிலைநாட்டப் போகிறதா அல்லது இந்த விசித்திர ஒப்பந்தத்தை ஏற்கப்போகிறதா என்பது விரைவில் தெரியவரும்.