“மனைவி ஊருக்கு போன நேரம்… வீட்டுக்குள் நுழைந்த காதலி”… இறுதியில் இரும்புப் பெட்டியில் அழுகிய சடலம்… ஆன்லைன் காதலால் நேர்ந்த விபரீதம்….!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான நபர் ஒருவர் தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போபாலின் நிஷாத்புரா பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் மகாராஷ்டிராவின் கோந்தியா மாவட்டத்தைச் சேர்ந்த சியா என்ற இளம்பெண்ணுடன் சமீருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் தீவிரமாகப் பழகி வந்தனர்.

சமீருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறியாத சியா, தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போபாலில் உள்ள சமீரின் வீட்டிற்கே நேரடியாகச் சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகுதான் சமீரின் குடும்பப் பின்னணி சியாவிற்குத் தெரியவந்தது. இருப்பினும், தன்னையும் திருமணம் செய்துகொள்ளுமாறு சியா பிடிவாதம் பிடித்ததால், அவர் அதே வீட்டிலேயே தங்கியுள்ளார். இதன் காரணமாக சமீரின் மனைவி மற்றும் சியா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினரின் கண்டனங்கள் மற்றும் தொடர் சண்டையினால் அதிருப்தியடைந்த சமீரின் மனைவி, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்றதைச் சாதகமாக வைத்துக்கொண்ட சியா, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சமீருக்குக் கடும் அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்குச் சமீர் மறுப்பு தெரிவித்த நிலையில், தன்னை விட்டு விலக வேண்டுமென்றால் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என சியா பேரம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமீர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் உச்சத்தில் சியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது குடும்பத்தினரின் உதவியுடன் சியாவின் உடலை ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் அடைத்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கில் வீசி மறைத்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு செப்டிக் டேங்கிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கவனித்து ஊர் மக்களிடம் கூறியுள்ளனர். பொதுமக்களின் புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் செப்டிக் டேங்கில் இருந்த இரும்புப் பெட்டியை மீட்டனர். பெட்டியைத் திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் சியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சியாவின் கையில் இருந்த டாட்டூவை வைத்து அவரை அடையாளம் கண்ட போலீசார், தலைமறைவாக இருந்த சமீரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் போபால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

17 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

27 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

38 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

44 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

1 மணத்தியாலம் ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago