ஐயோ கொடுமையே… மது பாட்டிலுக்காக அண்ணனை… இரும்பு ராடால் அடித்துக் கொன்ற தம்பி… சடலத்தின் அருகில் தூங்கிய கொடூரம்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

Spread the love

மதுரை கருப்பாயூரணி, ஒத்தவீடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரின் மகன்களான அழகர் (30) மற்றும் கணேசன் இருவரும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி இரவு வீட்டின் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, தம்பி கணேசன் வாங்கி வைத்திருந்த மது பாட்டில்களில், அதிக போதையில் இருந்த அண்ணன் அழகர் கூடுதலான பாட்டில்களைக் குடித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டிலிருந்த இரும்பு ராடை எடுத்து அழகரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பயன்படுத்திய இரும்பு ராடை வீட்டில் மறைத்து வைத்த கணேசன், அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால் தப்பியோட முடியாமல் வீட்டின் வாசலிலேயே தூங்கிவிட்டார்.

உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த தாய் கருப்பாயி காலையில் வீடு திரும்பியபோது, மூத்த மகன் அழகர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பைக் கண்டு அதிர்ந்து போய் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த அண்ணா நகர் காவல்துறையினர், அழகரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி கணேசனைப் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய இரும்பு ராடையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அண்ணனுடன் தொடர்பா?… 20 நிமிடம்… 170 முறை குத்து…! காதல் மனைவியை கத்தரிக்கோலால் சிதைத்த கணவன்… நடுங்க வைக்கும் பின்னணி…!!

பீகார் மாநிலம் ஆரா பகுதியில், காதலித்துத் தம்பதியான கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடு ஒரு கொடூர வன்முறையாக மாறியுள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

திக்.. திக்..! அதிர்ச்சி சம்பவம்… பயணி கேட்ட ஒரே வார்த்தை… நொடியில் பறிபோன உயிர்… நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த…

8 மணத்தியாலங்கள் ago

“போட்டோசை அழிச்சிடு… கெஞ்சிய மாணவி…” மிரட்டிய வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நபரால் மனமுடைந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மாணவி விஷம்…

8 மணத்தியாலங்கள் ago

“சார் நில்லுங்க!”… ஸ்தம்பித்த சாலை… அலறிய டிராபிக் போலீஸ்… நேருக்கு நேரா போய் நின்ன ஸ்கூட்டர் ரைடர்… கடைசியில நடந்த ட்விஸ்ட்…!!

வழக்கமாகக் காவல்துறையைக் கண்டாலே வாகன ஓட்டிகள் அஞ்சி நடுங்குவதும், சந்துகளுக்குள் வண்டியைத் திருப்புவதும் தான் அன்றாடக் காட்சி. ஆனால் இங்கே,…

8 மணத்தியாலங்கள் ago

துப்பாக்கிச் சூடு இல்லையா?!… முழங்கால் வரை அகற்றப்படும் அபாயம்?… ரோப்டா வழக்கில் கைதான ஹேமந்துக்கு என்னாச்சு?… வெளியிட்ட மர்ம ரிப்போர்ட்…!!

ரோப்டா தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மல்லேஸ்வரி விளக்கமளித்துள்ளார். அறுவை சிகிச்சை…

9 மணத்தியாலங்கள் ago

திறமையா? விபரீத வெறியா?… அந்த சில நொடி சாகசம்… கடைசியில் ICU ஆம்புலன்ஸில் முடிந்த கொடூரம்… என்ன நடந்தது?…!!

சாலையில் அசுர வேகமும் அபாயகரமான சாகசங்களும் மட்டுமே துணிச்சலின் அடையாளம் என நினைக்கும் விபரீத வேட்கை, சில நொடிகளில் வாழ்க்கையின்…

9 மணத்தியாலங்கள் ago