காசு தர முடியாது போடா… ஆட்டோ டிரைவரை நடுரோட்டில்… தாக்கிய இளம்பெண்கள்… பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் பகீர் வீடியோ வைரல்…!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில், ஆட்டோ கட்டணம் தொடர்பாக இரண்டு பெண்களுக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் நடுரோட்டில் கையாளாக மாறிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டோ கட்டணம் செலுத்துவது தொடர்பாகத் தொடங்கிய இந்த காரசாரமான உரையாடல், ஒருகட்டத்தில் தகராறாக முற்றி ஒருவரையொருவர் தாக்கும் அளவுக்குச் சென்றது. இந்த மோதலின் போது நிலைமை கைமீறிச் சென்ற நிலையில், அங்கிருந்த மற்றொரு பெண் தலையிட்டு அவர்களைத் தடுத்து சண்டையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றார்.

   

https://www.instagram.com/reel/Dd3657kjXKC/?utm_source=ig_web_button_share_sheet

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க, அப்பெண்கள் முறைப்படி புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அப்பெண்கள் தான் முதலில் தன்னைத் தாக்கியதாகவும், அதற்குப் பதிலடியாகவே தான் அவர்களைத் தாக்கியதாகவும் ஆட்டோ ஓட்டுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.