என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…! ஃபுல் போதையில் தள்ளாடி நடுரோட்டில் விழுந்த இளம் பெண்…. தப்பி ஓடிய வாலிபர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 12, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திற்பரப்பு பகுதிக்குச் சுற்றுலா வந்த சென்னை தனியார் நிறுவன ஊழியர்களான ஒரு இளம்பெண் மற்றும் மூன்று இளைஞர்கள், அருமனை-களியல் சாலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டுத் தள்ளாடியபடி மயங்கிக் கிடந்துள்ளனர். அந்த வழியே பணிக்குச் சென்ற பெண் காவலர் பிரேமலதா இதைக் கண்டு, உடனடியாக வாகனத்தை நிறுத்தி அவர்களை மீட்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்களில் இருவரது உடம்பில் ரத்தக் காயங்கள் இருந்த நிலையில், காவலரைக் கண்டதும் ஒரு வாலிபர் அங்கிருந்து நைசாகத் தப்பியோடிவிட்டார்.

அங்கிருந்த மற்ற இரு வாலிபர்களும் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்ல மறுத்து அடம் பிடித்ததால், பொதுமக்கள் உதவியுடன் அருமனை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், புதுக்கோட்டையைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணையும், தென்காசி மற்றும் அருமனையைச் சேர்ந்த மற்ற இரு இளைஞர்களையும் மீட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். விடுமுறைக்காகத் திற்பரப்பில் அறை எடுத்துத் தங்கியிருந்த இவர்களுக்குச் சாலை விபத்தினால் காயம் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் மோதலா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.