அய்யோ என்ன விட்டுருங்க… ஓடும் காரில் 18 வயது இளம்பெண்ணை கதற கதற… நண்பரோடு சேர்ந்து வாலிபர் செய்த கொடூரம்…!

By Nanthini on ஐப்பசி 8, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் லலித்பூர் மாவட்டத்தில் 18 வயது இளம் பெண் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த நிதி தாக்குர்(22) என்பவர் தாமாக முன்வந்து அந்தப் பெண்ணுக்கு லிப்ட் கொடுத்தார். இதனை நம்பி அந்த இளம் பெண்ணும் அவருடைய காரில் ஏறியுள்ளார்.

அவரை அழைத்துக்கொண்டு உரிய இடத்தில் இறக்கி விடாமல் அணைக்கட்டு அமைந்த பகுதியில் மறைவான இடத்திற்கு காரில் அழைத்துச் சென்ற நிதின், மற்றொரு நபருடன் சேர்ந்து ஓடும் காரில் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரை மூன்று மாதங்களாக அந்த இளம் பெண்ணுக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மற்றும் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.