உன்கிட்ட பேசணும் வா..! 5 நாட்கள் ரகசிய சிறை… போதை மருந்து செலுத்தி இளம்பெண்ணுக்கு சித்திரவதை… கதவை உடைத்து மீட்ட காவல்துறை…!!

Spread the love

பிரேசிலின் ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் நகரில், தனது முன்னாள் கணவரால் கடத்தப்பட்டு பல நாட்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட 24 வயது இளம்பெண் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். எமிலியானே தமாரா நூன்ஸ் கார்வாலோ என்ற அந்த பெண், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி காணாமல் போன நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒரு பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த ராணுவ போலீசார், அவர் வாயு முகமூடி அணிவிக்கப்பட்டு, கைகள் மற்றும் கால்கள் சங்கிலியால் படுக்கையோடு கட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

செவிலியர் துறையில் பணியாற்றும் எமிலியானே, தனது இரண்டு குழந்தைகள் குறித்து பேசுவதற்காக முன்னாள் கணவர் அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவை சந்திக்க சென்றபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அவரை தாக்கி ரகசிய அறை ஒன்றில் அடைத்து வைத்த அய்ல்டன், தொடர்ந்து அவருக்கு போதை மருந்து செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மீட்கப்படும் போது மூச்சுத்திணறல் மற்றும் ஆக்சிஜன் குறைபாட்டால் எமிலியானே கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை வைத்துப் பார்க்கும் போது, அவரை இன்னும் பல நாட்கள் அங்கு சிறைவைக்க அந்த நபர் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.

இந்த சம்பவத்தையடுத்து, ஆகஸ்ட் 21 அன்று கைது செய்யப்பட்ட அய்ல்டன் மீது ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோதமாக சிறைவைத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எமிலியானே தற்போது வீடு திரும்பியுள்ளார். சுமார் ஐந்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதி, கடந்த 2025 டிசம்பரில் பிரிந்தனர். மிகவும் சிறு வயதிலேயே திருமணம் நடந்ததால், தங்களுக்கு இடையேயான உறவு உண்மையான காதலா அல்லது வெறும் ஈர்ப்பா என்பதே தனக்குத் தெரியவில்லை என எமிலியானே தனது கடந்தகால உறவு குறித்து குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Gayathri

Recent Posts

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

1 மணத்தியாலம் ago

1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…

1 மணத்தியாலம் ago

“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…

1 மணத்தியாலம் ago

26 வயது இளைய மனைவி… சாப்பாட்டில் தூக்க மாத்திரை… எஸ்.ஐ ராஜ் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்த உண்மை….!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…

1 மணத்தியாலம் ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

2 மணத்தியாலங்கள் ago