கணவருடன் சண்டை, பல ஆண்களுடன் உல்லாசம்… ஆத்திரத்தில் இளம்பெண்ணை காலால் மிதித்தே கொன்ற கள்ளக்காதலன்…!

By Nanthini on ஆடி 25, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி (32) என்ற மனைவி உள்ள நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சரஸ்வதி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 21ஆம் தேதி அந்த வீட்டில் சரஸ்வதியின் உடல் அழகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சரஸ்வதியுடன் ஆண் ஒருவர் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சரஸ்வதி என் கள்ளக்காதலன் என்பதும், சரஸ்வதியின் செல் போன் மற்றும் நகைகள் மாயமாகி இருப்பதும் தெரிய வந்தது. கள்ளக்காதலன் சரஸ்வதியை கொன்று விட்டு நகை மற்றும் செல்போனை திருடி சென்று இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சென்னை அண்ணா நகரில் சலவை நிலையம் நடத்தி வரும் மத்திய பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த முகவரி அன்சாரி என்பவரை பிடித்து விசாரித்தனர்.

   

அப்போது அவர்தான் சரஸ்வதியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்த போது அவர் அளித்த வாக்கு மூலத்தில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு என் கடைக்கு சரஸ்வதி வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்ட நிலையில் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். பிறகு என்னிடம் சரஸ்வதி மணிக்கணக்கில் போன் பேசி வந்த நிலையில் நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.

   

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி கணவருடன் கோபித்துக் கொண்டு வந்துவிட்டார். பிறகு நாங்கள் இருவரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் வசித்தோம். சரஸ்வதி அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்தார். பலருடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று இருவரும் மது அருந்திய நிலையில் போதையில் சரஸ்வதி மயங்கி கீழே படுத்து விட்டாள். பிறகு அவரது வயிற்றிலும் தலையிலும் மிதித்து கொலை செய்தேன். அவள் அணிந்திருந்த மூன்று பவுன் நகை மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டேன் என்று அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.