கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம்பெண், தனது தலையை மொட்டையடித்துக்கொள்ளும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “என் அம்மா என் திருமணத்திற்கு திட்டம் போட்டிருக்கிறார்” என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், பெற்றோர் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதால் அதற்கான எதிர்ப்புப் போராட்டமாகவே அந்தப் பெண் இவ்வாறு மொட்டையடித்துக் கொண்டார் என்று தவறாகப் புரிந்து கொண்டனர். இதனால், இணையத்தில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு எதிராகவும், திருமண வற்புறுத்தலுக்கு எதிராகவும் பல்வேறு வதந்திகள் காட்டுத்தீயாய் பரவத் தொடங்கின.
இணையத்தில் வதந்திகள் தீவிரமாகப் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணான கீர்த்தனா தனது யூடியூப் பக்கத்தில் இதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தான் மொட்டையடித்துக் கொண்ட சம்பவம் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு எதிரான போராட்டம் அல்ல என்றும், மாறாக இது தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நகைச்சுவைக்காக மட்டுமே செய்யப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இதன் மூலம் இணையத்தில் பரவிய வீண் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…