கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், நள்ளிரவில் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துத் தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாகப் பிடித்து, கணவனின் குங்குமத்தை அழித்துக் கள்ளக்காதலனுடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்த விநோத நாடகம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகாரின் அலௌலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண் ஒருவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அக்டோபர் 20, 2026 நள்ளிரவில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தகாத நிலையில் பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், பெண்ணின் தலையிலிருந்த குங்குமத்தைக் கழுவிவிட்டு, ஏற்கனவே திருமணமான கள்ளக்காதலனை வைத்துப் புதிதாகக் குங்குமம் சூட்டி வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்தனர்.
இதையடுத்து கள்ளக்காதலனுடன் அவனது வீட்டிற்குச் சென்ற அப்பெண்ணை, அவனது முதல் மனைவி வாசலிலேயே மறித்து பலத்த வாக்குவாதம் செய்து அடித்து விரட்டியுள்ளார். இதனால் கணவனும் இல்லாமல், கள்ளக்காதலனும் இல்லாமல் நடுத்தெருவில் நின்ற அந்தப் பெண், அலௌலி காவல் நிலையத்திற்குச் சென்று, நிலத்தகராறு காரணமாகத் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் பழிவாங்கவே இந்தச் சதி நடத்தப்பட்டது எனக்கூறி 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
