“12 வருட வேதனைக்கு முற்றுப்புள்ளி…” ரோபோ உதவியுடன் எழுந்து நடந்த இளம்பெண்… கண்ணீருடன் வியப்பு…. இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2026

Spread the love

லெபனான் நாட்டைச் சேர்ந்த ஜெசிகா தவில் என்ற பெண், கடந்த 2014ஆம் ஆண்டு தனது 16வது வயதில் ஏற்பட்ட கோர விபத்து காரணமாகத் தண்டுவடப் பாதிப்பு அடைந்து T6 பாராபிலீஜியா எனப்படும் இடுப்புக்கு கீழே இயக்கமின்றிப் பாதிக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாகத் தனது அன்றாடத் தேவைகளுக்குச் சக்கர நாற்காலியையே நம்பி வாழ்ந்து வந்த அவர், தற்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார்.

https://www.instagram.com/reel/DPgaoAhDkmq/?utm_source=ig_web_copy_link&dlrf=MzRlODBiNWFlZA==&srtk=MzRlODBiNWFlZA==

   

‘ஈவ்’ எனப்படும் அணியக்கூடிய ரோபோடிக் எக்சோஸ்கெலடன் கருவியின் உதவியுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது சொந்தக் காலில் நிமிர்ந்து நின்று உதவி உடன் நடந்துள்ளார். இந்த விநாடியில் தான் அனுபவித்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் மீண்டும் மீண்டும் “Oh My God!” எனக் கூறி உணர்ச்சிவசப்பட்ட அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சை நெகிழ வைத்து வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 2026 இல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்ற இந்தக் கருவி, தண்டுவடப் பாதிப்புடன் போராடும் பலருக்கு எதிர்காலத்தில் புதிய நம்பிக்கையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.