“கண்ணை மூடிய அந்த 35 விநாடிகள்”…. சென்னை MTC பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… இளம்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…..!

Spread the love

சென்னையில் மாநகரப் பேருந்தில்பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடமிருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு செல்போன்கள் மர்மமான முறையில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.கே.நகர் ESI பேருந்து நிறுத்தத்தில் இருந்து 17D எண் கொண்ட பேருந்தில் ஏறிய அந்த இளம்பெண், எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகே இறங்க திட்டமிட்டிருந்தார். பயணத்தின் போது, அவரது அருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி ஒருவர் உணவு, தண்ணீர் மற்றும் பவர் பேங்க் குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்டு அவரது கவனத்தைத் திசைதிருப்பியதாகக் கூறப்படுகிறது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே வரை அந்த இளம்பெண்ணிடம் செல்போன்கள் இருந்துள்ளன. அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக அவர் இருக்கையிலிருந்து எழுந்தபோது, திடீரென அவரது கண்களில் ஏதோ ஒரு பொடி போன்ற பொருள் விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட எரிச்சலால் அவர் கண்களை மூடிக்கொண்டு தோழியின் கைகளைப் பிடித்துள்ளார். அந்த 35 முதல் 40 விநாடிகளுக்குள், மர்ம நபர்கள் அவரது பையைக் கிழித்து உள்ளிருந்த இரண்டு செல்போன்களையும் நைசாகத் திருடிச் சென்றுள்ளனர். பின்னர் நிலையை உணர்ந்து பார்த்தபோதுதான் செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ள அந்த இளம்பெண், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் தங்களது செல்போன், பணம் போன்ற விலைமதிப்பற்ற உடைமைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, மாநகரப் பேருந்து பயணிகளிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

13 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

21 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

44 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

53 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

58 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

59 minutes ago