கட்டிலில் கள்ளக்காதலனுடன் சிக்கிய மருமகள்… பார்க்கக் கூடாததைப் பார்த்த சித்தப்பா… இறுதியில் நேர்ந்த பயங்கரம்….!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த இளம்பெண் ஒருவரை, அவரது சித்தப்பாவே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் சுபிதா (28) என்பதும், அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அருண் பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சுபிதாவிற்கு அனீஸ் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் இந்த விபரீத முடிவுக்கு காரணமாகியுள்ளது.

சுபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்ற சுபிதா, அங்கிருந்தபடியே தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். தனது குழந்தைகள் தந்தையுடன் இருக்கும் நேரங்களில், அனீஸை வீட்டிற்கே வரவழைத்து தனிமையில் இருந்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் மணிக்கணக்கில் செல்போனில் அவருடன் பேசி வந்ததை சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று சுபிதாவின் நடவடிக்கைகளை ராஜேஷ் தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுபிதா, மாற்றுத்திறனாளியான தனது சித்தப்பா ராஜேஷை கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுபிதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுபிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் போலீசார், சுபிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாற்றுத்திறனாளியான ராஜேஷை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனையில் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

7 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

7 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

8 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

8 மணத்தியாலங்கள் ago