நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்த வாலிபர் இளம்பெண்ணை பார்ப்பதற்காக நேற்று மாலை பீளமேடு பகுதிக்கு வந்துள்ளார். பிறகு அந்த வாலிபரும் இளம்பெண்ணும் விடுதியில் முன்பு என்று பேசிக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த இளம் பெண் வேகமாக தனியார் விடுதிக்குள் சென்றுள்ளார்.
இதனால் வாலிபரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பிறகு சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் விடுதியில் நான்காவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்ணை அக்கம் பக்கத்தினர் வீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
