ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஷேவா பாலத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 20 வயதான பாயல் தேவி என்ற இளம் பெண், திடீரென ஷேவா பாலத்தில் இருந்து சீறிப் பாயும் செனாப் ஆற்றில் குதித்துள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பெண்ணைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் தோடா பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் சீறிப்பாயும் செனாப் ஆற்றில் இரவும் பகலுமாகப் பாயல் தேவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இளம் பெண்ணின் இந்தத் தீவிர முடிவிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
