“விபத்து இல்லங்க… டிராமா போடுறான்…” 22 நாட்களாக கோமாவில் இளம்பெண்… லிவ்-இன் பார்ட்னர் தான் காரணமா…? குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு… பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி பெற்று வந்த இளம் பெண் ஒருவர், கடந்த 22 நாட்களாகக் கோமா நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார். இவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த ஆண் நண்பருடன் பைக் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அந்த ஆண் நண்பர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர் அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் வேண்டுமென்றே தாமதம் செய்ததாகவும், தனது போனில் இருந்த அழைப்புப் பதிவுகள் மற்றும் சேட்களை அழித்து ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

   

ஆரம்பத்தில் இதனை ஒரு சாதாரண விபத்து வழக்காகக் கருதிய போலிஸார், குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து வழக்கை தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். அந்தப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரத்திற்கு பின்னணியில் இருப்பது விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்ற கோணத்தில் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.