இளம்பெண்ணை வெட்டி பிரியாணி… சூட்கேஸில் வீசப்பட்ட உடல்….. சென்னையில் நடந்த சினிமா பாணி கொடூரம்…!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

சென்னையில் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலின் பாகங்களைக் காய்கறி மற்றும் அரிசியுடன் சேர்த்து பிரியாணியாகச் சமைக்க முயன்ற பகபதி மாஜி – மாணிக் லஸ்கர் ஆகிய கொடூர ஜோடியைத் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வீசிச் செல்லப்பட்ட சூட்கேஸிலிருந்து மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பாக அக்கம் பக்கத்து பெண் அளித்த துப்பு ஒன்றின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய நபர்களின் வீட்டில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த பிரியாணி அண்டாவில் மனித உடல் பாகங்கள் சமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அதிர்ச்சிகரமான உண்மை கண்டறியப்பட்டது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர வலைவீசப்பட்டுள்ளது.