“ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்” 5 கோடி பிரசவத்தில் ஒருமுறைக்கு மட்டுமே இது நடக்கும்… மொத்தம் 7 குழந்தைகளுக்கு தாயான பெண்…!!

By Soundarya on புரட்டாதி 16, 2025

Spread the love

மும்பை சத்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோரேகார்  பகுதியை சேர்ந்த காஜல் விகாஸ் ககுர்தியா (27) என்ற கர்ப்பிணி ஒருவர்  பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள்  பரிசோதனை மேற்கொண்டதில் அந்த பெண் வயிற்றில் நான்கு குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக  நான்கு குழந்தைகளும் தாயின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

இதில் மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை . தாயும் நான்கு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பது என்பது அருகிலும் அரிதான நிகழ்வு. பத்து லட்சத்திலிருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இது போன்ற பிரசவம் பதிவாவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு குழந்தைகளை பிரசவித்த காஜல் இதற்கு முன்பாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருந்தது. மொத்தம் இவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர்.