விடுதி குளியல் அறையில் குளிக்க சென்ற இளம்பெண்… கதவைத் தட்டி பார்த்த தோழி… இறுதியில் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி ..!

By Nanthini on ஐப்பசி 27, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவலாபுரா கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மகள் ரஞ்சிதா (27) பெங்களூரில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இதனிடையே ரஞ்சிதாவின் தோழி ஒருவருக்கு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஞ்சிதா மற்றொரு தோழி ரேகா என்பவருடன் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். பிறகு அவர்கள் அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் அரை இடத்தை தங்கி உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கும் விடுதியில் ரேகா முதலில் குடித்துவிட்டு வந்தார். பிறகு ரஞ்சிதா குடிக்க சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ரேகா குளியலறையின் கதவை தட்டியபோது ரஞ்சிதா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விடுதி ஊழியர்களுக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரஞ்சிதா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

குளியல் அறையில் தண்ணீர் சூடேற்றும் எந்திரத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டதாக ரேகா தெரிவித்தார். இருந்தாலும் ரஞ்சிதாவின் மரணத்தில் போலீசருக்கு சந்தேகம் எழுந்ததால் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தத் தங்கும் விடுதி உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் வரி பாக்கி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.