மும்பை காந்திவிலி கணேஷ் நகர் பகுதியில் கோவில் ஒன்றில் 52 வயது நபர் பூசாரிகளாக இருந்து வருகிறார். கோவிலுக்கு வழக்கமாக வந்து செல்லும் 19 வயது இளம்பெண் ஒருவருடன் பூசாரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த பூசாரி இளம் பெண்ணிடம் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். கடந்த 19ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட போது தன்னிடம் பாலியல் உறவுக்கு இணங்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
உடனே அவருடைய தந்தை அதிகாலை 2:00 மணி அளவில் தனது மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூசாரிக்கு எதிராக புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் காலையில் விசாரணை நடத்துவதாக தெரிவித்த நிலையில் விசாரணைக்காக பூசாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் கோவிலுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…