“அவர்கிட்ட பேசாதே”… அம்மா சொன்ன ஒரே வார்த்தை… அடுத்த நிமிடம் அந்த இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… திருமண வீட்டில் விழுந்த இடி… பெற்றோர்களே எச்சரிக்கை…!!!

By Rajeshwari on சித்திரை 6, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில், வருங்கால கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் 18 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னா சரோஜ் என்பவரது மகள் லட்சுமிக்கும், ஒரு இளைஞருக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.

மேலும் இதற்கிடையில் லட்சுமி தனது வருங்கால கணவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே இவ்வாறு பேசுவது சரியாக இருக்காது எனக் கூறி அவரது தாய் அவரைக் கண்டித்துள்ளார். தாயின் கண்டிப்பால் மிகுந்த மனவேதனை அடைந்த லட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

   

இந்த துயரச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்ய முயன்றனர். ஆனால், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.