அக்கா குழந்தையை பார்க்க சென்ற இளம்பெண்…! கால் வலிக்கு ஊசி போட்ட மருத்துவர்…. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

ஓசூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி ரேஷ்மா. ரேஷ்மாவின் அக்காவிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தையையும், அக்காவையும் கவனிப்பதற்காக ரேஷ்மா ஓசூர் அரசு மருத்துவமனையில் தங்கி இருந்தார். நேற்று காலை ரேஷ்மாவுக்கு கால் வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருக்கும் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

அவர் வலி நிவாரண ஊசி போட்ட நிலையில் ரேஷ்மா மீண்டும் தனது அக்கா மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக வார்டுக்கு சென்றார். இதனையடுத்து அங்குள்ள பாத்ரூம் அருகே திடீரென ரேஷ்மா மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்தபோது ரேஷ்மா உயிரிழந்தது தெரியவந்தது. அவரது இறப்பிற்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனை நடத்தினால் தான் தெரியவரும். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.