பிரசவத்தின் போது வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த டாக்டர்… 1 1/2 வருஷமாக துடித்த இளம் பெண்… ஆப்ரேஷன் தியேட்டரில் பரிதாபமாக போன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹாரியில் மருத்துவர்களின் அஜாக்கிரதையால் ஒன்றரை ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலுடன் வாழ்ந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. உஷா தேவி என்ற 25 வயதுப் பெண்ணிற்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் சங்கீதா குமாரி என்பவர் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அந்த சமயத்தில், மருத்துவர் எதிர்பாராத விதமாக அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை உஷாவின் வயிற்றிலேயே வைத்துத் தைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற உஷா தேவிக்குத் தொடர்ந்து கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பலமுறை உள்ளூர் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும், அந்த கத்திரிக்கோல் மருத்துவர்களின் கண்ணில் படாததால் சாதாரண வலி என்று கூறி மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அண்மையில் வலி தாங்க முடியாமல் வேறொரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றபோதுதான், சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை அவசரமாக அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அந்த கத்திரிக்கோல் ஒன்றரை ஆண்டுகளாக வயிற்றுக்குள் இருந்ததால், அது குடலின் பல பகுதிகளைக் கிழித்து உடல் முழுவதும் கடுமையான கிருமித் தொற்றை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் தற்போது போராடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago