அடப்பாவிங்களா… 45 லட்சம் செலவு பண்ணி என்ன பிரயோஜனம்?… கார் வாங்க இன்னும் 5 லட்சம் கொண்டு வா… வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… புனேவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

புனே மாவட்டம், வடச்சிவாடியைச் சேர்ந்த 23 வயதான வைஷ்ணவி ஓம்கார் கிசாரே என்ற மென்பொருள் பொறியாளர், திருமணமான நான்கே மாதங்களில் செப்டம்பர் 24 அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்குக் கடந்த மே 9, 2026 அன்று திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்காக ரூ 45 லட்சம் வரை செலவு செய்து, 10 சவரன் தங்க நகையும் பெண்ணின் வீட்டார் கொடுத்துள்ளனர். இருப்பினும், புதிய கார் வாங்குவதற்காகக் கூடுதல் தொகையாக ரூ 5 லட்சத்தைக் கொண்டு வருமாறு வைஷ்ணவியை அவரது கணவரும் மாமியார் வீட்டாரும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வரதட்சணைத் தொல்லை காரணமாக வைஷ்ணவி மன ரீதியாகவும் உடலளவிலும் கடும் சித்திரவதைக்கு ஆளானதாக அவரது தந்தை பிரவீன் ரகுநாத் ஜாரண்டே புகார் அளித்துள்ளார். இறப்பதற்கு முன்பாக, செப்டம்பர் 24 இரவு, வைஷ்ணவி தனது தாயாரிடம் தொலைபேசியில் பேசி மாமியார் வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்துக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பின்னர் நள்ளிரவில் குடும்பத்தினரால் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, நேரில் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

   

இச்சம்பவம் குறித்துப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், காலே படல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வைஷ்ணவியின் கணவர் ஓம்கார் சஞ்சய் கிசாரே (28), மாமனார் சஞ்சய் மகாதேவ் கிசாரே (49) மற்றும் மாமியார் ரூபாலி சஞ்சய் கிசாரே (42) ஆகிய மூன்று பேர் மீதும் வரதட்சணைத் தடைச் சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் ராவத் தலைமையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.