தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி … 27 சவரன் நகை போட்டும் வரதட்சனை கொடுமை… 3 வயது மகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை…!

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தண்டலம் பாலாஜி பகுதியை சேர்ந்த வினோத் (30) என்பவர் ஐடி கம்பெனி ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி நிவேதாவும் (26) ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் பெண் வீட்டார் 27 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ரியா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிவேதாவுக்கு பெற்றோர் இல்லாத நிலையில் அண்ணன் மட்டுமே உள்ளார்.

இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிவேதா சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளார். பிறகு கணவர் வீட்டு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி நிவேதாவை கடந்த மாதம் வீட்டுக்கு அழைத்து வந்தனர். சமாதானம் செய்து அழைத்து வந்த பிறகு நிவேதா அதிக செலவு செய்கிறார், அனைத்திற்கும் பிடிவாதமாக இருக்கிறார் என்று தனது பெற்றோரிடம் வினோத் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வினோத் வீட்டில் ஒரு அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை ரியாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வினோத்தின் பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர். அந்த சமயத்தில் நிவேதா வீட்டின் மற்றொரு அறையில் தனியாக இருந்துள்ளார். பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு வினோத் பெற்றோர்கள் வீடு திரும்பிய போது நிவேதாவின் அரை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உடனே அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது நிவேதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே நிவேதாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர், அவருடைய சாவில் சந்தேகம் உள்ளது என்று நிவேதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலையில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

5 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

5 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

6 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

6 மணத்தியாலங்கள் ago