“ஐயோ அக்கா, கதவை திற ரொம்ப பயமா இருக்கு”… திடீரென ரூமுக்குள் ஓடிய சகோதரி… கதவைத் திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்த லிங்கபுரத்தை சேர்ந்த மிக்கேல் சேவியர் (48) என்ற டெய்லர் தற்போது குடும்பத்துடன் கங்கா நகர் முதல் தெருவில் வசித்து வருகின்றார். இவருடைய மகள் லிவினா(21) பிஎஸ்சி பட்டதாரி. இவர் பகுதி நேரமாக ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையையும் தேடி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் லிவினா மற்றும் அவருடைய சகோதரி ஷைனி ஆகியோர் மட்டும் வீட்டிலிருந்து உள்ளனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரி ஷைனி அறையின் கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தார். அப்போது அறையில் லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

   

உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய போலீசார் செல்போனில் சிம் கார்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே விசாரணையை தொடங்கியுள்ளனர். திடீரென இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.