4 வருட உயிருக்கு உயிரான காதல், 2 நாட்களில் காதலனுடன் திருமணம்… பெற்றோர் இல்லாத போது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

பவானி அருகே நாளை காதலனுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட விருமாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த முனியப்பன் மற்றும் மாரியம்மாள் தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூன்று பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கடைசி மகளான நிர்மலா (23) பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மாரி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்ற நபருடன் நிர்மலாவுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததால் அவர்களின் சம்மதத்துடன் நாளை எல்லப்பாளையம் ஸ்ரீ வீரானுர் கோவிலில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. வரவேற்பு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற திருமண மண்டப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

   

திருமண வேலை காரணமாக நிர்மலாவின் தந்தை மற்றும் தாயார் இருவரும் நேற்று முன்தினம் மதியம் மகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு அந்தியூருக்கு சென்று விட்டனர். மீண்டும் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்து சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

   

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மட்டுமல்லாமல் உயிரிழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.