“கடைசியாக அக்கா சொன்ன வார்த்தை…” பதறி ஓடி வந்த தம்பி…. மாமியாரால் திருமணமான 5 மாதத்தில் அரங்கேறிய கொடுமை…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 23, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா என்பவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் பூஜா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பூஜாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போது பூஜாவின் சகோதரர் கரண் கூறியதாவது, பூஜா என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மாமியார் அடித்து துன்புறுத்துவதாக கூறினார். மன உளைச்சலில் இருக்கிறேன்.

   

இனிமேல் சித்தரவதை தாங்க முடியாது. சீக்கிரமே நான் இறந்து விடுவேன் என கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்வதாக கரண் கூறியுள்ளார். அதன் பிறகே பூஜா தற்கொலை செய்து கொண்ட விஷயம் கரணக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பூஜாவின் கணவர் மாமியார், ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.