காட்டுப் பாதையில் பயணித்த போது ஸ்கூட்டரில் பெட்ரோல் தீர்ந்து நின்ற நிலையில், அடுத்தடுத்து தாக்கிய இரண்டு சிறுத்தைகளிடம் இருந்து ஹெல்மெட்டைப் பயன்படுத்தி வீராங்கனையாகப் போராடி இளம்பெண் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் இளம் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து நின்றுள்ளது. அப்போது புதருக்குள் இருந்து பாய்ந்து வந்த கொடூரச் சிறுத்தை ஒன்று அப்பெண்ணைத் தாக்கியுள்ளது. நிலைகுலையாத அந்தப் பெண், தான் வைத்திருந்த ஹெல்மெட்டை ஆயுதமாகப் பயன்படுத்திச் சிறுத்தையை அடித்துத் தற்காத்துக் கொண்டார்.
ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே மற்றொரு சிறுத்தையும் அங்கு வந்து அப்பெண் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்துள்ளது. மீண்டும் எல்லை இல்லாத துணிச்சலைக் காட்டிய அப்பெண், அந்தச் சிறுத்தையின் தாக்குதலிலிருந்தும் போராடித் தப்பித்துத் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். சாலைப் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி, கொடூர மிருகங்களிடம் இருந்தும் தனது உயிரைக் காப்பாற்றிய அந்த ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தையும், அப்பெண்ணின் வீரத்தையும் கண்டு நெட்டிசன்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…