2 குழந்தைகளை விட்டுட்டு காதலன் கேக்குதா உனக்கு.? தோட்டத்தில் கையும் களவுமாக சிக்கிய ஜோடி… கௌரவத்தைக் காப்பாற்ற பஞ்சாயத்து எடுத்த ‘பகீர்’ முடிவு..!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

பீகார் மாநிலம் வைஷாலியில் சமூக வலைதளம் மூலம் மலர்ந்த ஒரு நம்பமுடியாத காதல் கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான குஷி குமாரி என்ற பெண், தன்னை விடப் பல வயது இளையவரான பரதேசி குமார் என்ற இளைஞரின் காதலில் விழுந்துள்ளார். இந்தக் காதலின் ஈர்ப்பால், தான் பெற்ற பிள்ளைகளையும் குடும்பத்தையும் துறந்துவிட்டுத் தனது காதலனுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரு தோட்டத்தில் நெருக்கமாக இருந்தபோது, அதைக் கண்ட கிராம மக்கள் அவர்களைப் பிடித்துப் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கிராமப் பஞ்சாயத்திற்குச் சென்ற நிலையில், அங்கு அவர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. “நாங்கள் நண்பர்கள் மட்டும்தான், எங்களுக்குத் திருமணம் வேண்டாம், எங்களை மன்னித்து விடுங்கள்” என்று அந்த இளைஞர் திரும்பத் திரும்பக் கெஞ்சிய நிலையிலும், பஞ்சாயத்தினர் அதைக் கேட்க மறுத்துவிட்டனர்.

   

“குடும்ப கௌரவத்தோடு விளையாடுவதைச் சகித்துக் கொள்ள முடியாது” என்று தீர்ப்பளித்த பஞ்சாயத்து, இருவருக்கும் அங்கேயே வலுக்கட்டாயமாகத் திருமணத்தை நடத்தி முடித்தது. சமூக வலைதளத்தில் தொடங்கிய இந்த வினோத காதல், இறுதியில் ஊர் மக்களின் முன்னிலையில் கட்டாயத் திருமணத்தில் முடிந்தது அந்தப் பகுதியில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.