ஐயோ கொடுமையே… 8 மாதத்தில் முடிந்த வாழ்க்கை… ரூ 10 லட்சம் வரதட்சணைக்காக இளம் பெண் கொடூரக் கொலை?… உ.பி.யில் பேரதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியைச் சேர்ந்த பிராச்சி திவாரி என்ற பெண்ணிற்கு, கடந்த 2026 பிப்ரவரி 13 அன்று சீதாபூரில் உள்ள மஹ்மூதாபாத்தைச் சேர்ந்த கமல் கிஷோர் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து வெறும் எட்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், அவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தின் போது பிராச்சியின் பெற்றோர் நான்கு சக்கர வாகனம், ரொக்கப் பணம் மற்றும் நகைகளை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இருப்பினும், பிராச்சியின் மாமியார் வீட்டார் கூடுதல் வரதட்சணையாக ரூ. 10 லட்சம் கேட்டு தொடர்ந்து அவருக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையான சித்திரவதைகளை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

   

கூடுதல் வரதட்சணைக் கோரிக்கையை நிறைவேற்றாததால், மாமியார் வீட்டாரே பிராச்சியை சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டதாக அவருடைய தாய்வழி குடும்பத்தினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.