பெங்களூரை சேர்ந்த 25 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவர் ஒரு டேட்டிங் செயலி மூலம் அனன்யா என்ற பெண்ணுடன் பழகியுள்ளார். இருவரும் ஆபாசமாகவும் பேசிக் கொண்டனர். கடந்த 4-ஆம் தேதி அந்த பெண் வாலிபரை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டார். வீடியோ காலில் அந்த பெண் நிர்வாணமாக தோன்றியதுடன் அந்த வாலிபரையும் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அந்த இளம்பெண் நீ நிர்வாணமாக இருக்கும் வீடியோ என்னிடம் உள்ளது. அதை சோசியல் மீடியாவில் பதிவிடாமல் இருக்க 30 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் இளம் பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் மீண்டும் வாலிபரை மிரட்டி இளம்பெண் 40,000 ரூபாய் பணத்தை பறித்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் வேறு வழியில்லாமல் வாலிபர் பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
