திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில், பொங்கல் பண்டிகை தினத்தன்று இளம்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (26) என்ற பெண், வரபருதுதி காட்டுத்தோட்டம் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தனியார் பேருந்து நடத்துனரான இவரது கணவர் அங்கமுத்து, மது அருந்திவிட்டு அடிக்கடி பூங்கொடியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், முக சிதைந்த நிலையில் பூங்கொடியின் உடல் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாராபுரம் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இக்கொலை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் பூங்கொடியின் கணவர் அங்கமுத்துவை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இந்தப் படுகொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…