நீங்கள் ரொம்ப கியூட்… நடுரோட்டில் ஆட்டோவில் சென்ற பெண்களைப் பின்தொடர்ந்து… தொல்லை செய்த வாலிபர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Swetha on கார்த்திகை 7, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரவு நேரத்தில் ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்த பெண்களை, இரண்டு மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் பின்தொடர்ந்து தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்கள் ஆட்டோவில் இருந்த பெண்களிடம் “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” என்று கேலி செய்தவாறே அத்துமீறி நடந்து கொண்டனர்.

பயந்து ஓடாமல், அந்தப் பெண்கள் தங்களது செல்போனில் இந்த வெட்கக்கேடான செயலையும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் தைரியமாகப் பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோ, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் மீதான அச்சமின்மை குறித்த தீவிர விவாதங்களை பொதுமக்களிடையே ஏற்படுத்தியது.

   

இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.