தட்டி கேட்டது குத்தமா…? 70 வயது மூதாட்டியை சீரழித்து கொன்ற வாலிபர்கள்… இருட்டான பகுதியில் உடலை வீசி…! நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் அருகே இரு நபர்கள் மது அருந்துவதைப் பார்த்துப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், அந்த மூதாட்டியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தகராறு முற்றிய நிலையில், ராஜேஷ் மற்றும் ஹரிராம் ராபத் ஆகிய இரு நபர்களும் சேர்ந்து அந்த மூதாட்டியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது கட்டிலின் இரும்புச் சட்டத்தில் பலமாக மோதி விழுந்ததால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

குற்றத்தை மறைப்பதற்காகக் இருவரும் உடலை வீட்டின் பின்புறம் இருந்த இருட்டான பகுதிக்கு மாற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மூதாட்டியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மோகன்லால்கஞ்ச் காவல் நிலைய போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்பச் சான்றுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.