திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர் கே பேட்டை தாலுக்கா ஐயனேரி கிராமத்தை சேர்ந்த குமரேசன் மற்றும் சதீஷ் இருவரும் அந்த கிராமத்தில் திருமணமான பெண்கள் மற்றும் சிறுமிகள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைத்து பெண்களையும் கேடு கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த கிராம மக்கள் இருவரையும் எச்சரித்து பலமுறை அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் மது போதையில் வந்ததாகவும் இரவு நேரம் என்றும் பாராமல் பெண்களை கிண்டல் செய்ததாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து சென்ற இளைஞர்கள் தன்னுடன் நண்பர்களை சேர்த்து அடியாட்களுடன் 10 பேர் ஒன்று கூடி மீண்டும் கிராமத்துக்குள் வந்து கத்தியை வைத்து நானும் ரவுடிதான் என்று கூறி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 10 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.
இதனைப் பார்த்த இளைஞர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த நிலையில் அவர்களை மடக்கிப்பிடித்த கிராம மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்த தர்ம அடி கொடுத்தனர். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து சுற்றுலாவுக்காக…
கர்நாடக மாநிலம் கானகலபண்டே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் பம்ப் செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டு வெடிகுண்டு வெடித்துப்…
லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…
காஸ்கஞ்சில் உள்ள விஷால் மெகா மார்ட்டில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த காஸ்கஞ்ச் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு…
ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…
அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…