“நான் எப்போ கூப்பிட்டாலும் வரணும்”… இரும்பு கம்பியால் தாக்கி மாணவியை மிரட்டிய கஞ்சா ஆசாமி.. இறுதியில் நடந்த உச்சக்கட்ட கொடூர சம்பவம்…!

Spread the love

மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் வசந்த் என்ற மாணவர், அதே கல்லூரியில் பயிலும் ஜூனியர் மாணவி ஒருவரை காதலிப்பதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தனது தாய் தனியார் பள்ளிக்கூடம் நடத்தி வருவதாகவும், திருமணத்திற்குப் பிறகு அதனை அவரே கவனித்துக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை வாரி இறைத்துள்ளார். இதனை நம்பிய மாணவியை, சில மாதங்களுக்கு முன்பு தனது ஆண்டிபட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிக்குத் தெரியாமல், அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகளை வசந்த் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

இந்நிலையில், வசந்திற்கு கஞ்சா போதை பழக்கம் இருப்பது நாளடைவில் மாணவிக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவருடனான காதலை முறித்துக் கொண்டு பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த், தங்களுக்குள் இருந்த ரகசிய வீடியோவைக் காண்பித்து மாணவியை மிரட்டத் தொடங்கியுள்ளார். “நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து விடுவேன்; இதைப் பார்த்தால் உனது குடும்பத்தினரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்” என்று கூறித் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, மதுரையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மாணவியை மிரட்டி வரவழைத்த வசந்த், அங்கு வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்றவர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் மாணவியைத் தாக்கியுள்ளார். இதில் மாணவி மயக்கமடையவே, பயந்துபோன வசந்த் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, “நான் எப்போது அழைத்தாலும் நீ என்னை தனிமையில் சந்திக்க வர வேண்டும்” என்று மீண்டும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், அவரிடம் விவரங்களைக் கேட்டுப் பெற்ற பிறகு மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வசந்த் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், வசந்த் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்து சென்றதாகவும், ஆனால் போலீஸார் அவரைக் கைது செய்யாமல் தப்பிக்க விட்டுவிட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வசந்த் தல்லாகுளம் காவல் நிலையம் முன்பாக பைக்கில் தாராளமாகச் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

3 மணத்தியாலங்கள் ago