“எனக்கு பொண்டாட்டி வேணாம், அந்த பொண்ணு தான் வேணும்”… கள்ளக்காதலிக்காக செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… போலீசையே அதிர வைத்த சம்பவம்…!

Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆராய்ச்சி பட்டி பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (30) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பிரியதர்ஷினி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே மாரிஸ்வரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் மாரீஸ்வரன் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் பிரியதர்ஷினி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் அவர் அதே ஊரில் திருமணம் ஆன வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த பிரியதர்ஷினி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அதேசமயம் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் அவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் மாரீஸ்வரனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

குடிபோதையில் காவல் நிலையத்திற்கு வந்த மாரீஸ்வரன் காவல் நிலையத்தின் பின்புறம் இருந்த போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். கீழே இறங்க வேண்டும் என்றால் அதற்கு நிபந்தனைகளையும் வைத்துள்ளார். செல்போன் டவரில் அமர்ந்து கொண்ட மாரீஸ்வரன் எனக்கு என் பொண்டாட்டி வேணாம் அந்த பொண்ணு தான் வேணும், நீங்கதான் அவளை கல்யாணம் பண்ணி வைக்கணும், எனக்கு வாரத்துக்கு ஒரு 30,000 கொடுத்து உதவி செய்யணும், அப்போதுதான் கீழே இறங்குவேன் என்று கூறி போலீசாரை மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினரை வரவழைத்த போலீசார் சுமார் 2 மணி நேரம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பாக மீட்டனர். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வாலிபர் மது போதையில் கள்ளக்காதலியை திருமணம் செய்து வைக்க கூறி செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

9 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

9 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

9 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

10 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

10 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

10 மணத்தியாலங்கள் ago