உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாத்ரா பங்கர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான அக்ஷய் குமார் என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் கணவர் அக்ஷய் குமாரை பலமுறை எச்சரித்தும், அவர் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று அக்ஷய் குமார் தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். மனோஜ் குமார், யுவக் மற்றும் பாரத் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அக்ஷய் குமாரை கடுமையாகத் தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…