“என் பொண்டாட்டியை விட்டுடு” எச்சரித்தும் கேட்காத வாலிபர்… வயலில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர்.!!

By Soundarya on பங்குனி 24, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாத்ரா பங்கர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான அக்‌ஷய் குமார் என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் கணவர் அக்‌ஷய் குமாரை பலமுறை எச்சரித்தும், அவர் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று அக்‌ஷய் குமார் தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். மனோஜ் குமார், யுவக் மற்றும் பாரத் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அக்‌ஷய் குமாரை கடுமையாகத் தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.