சுமார் 20 முதல் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனது அறைக்குள் திருட வந்த திருடன் ஒருவனை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். அந்தத் திருடன் இளைஞரின் செல்போன் மற்றும் சுமார் 1,000 ரூபாய் பணத்தைத் திருட முயன்றபோது பிடிபட்டுள்ளார். பொதுவாக இது போன்ற சூழலில் பலரும் ஆத்திரமடைவார்கள், ஆனால் இந்த இளைஞர் காட்டிய ரியாக்ஷன் முற்றிலும் வேறானது.
लगभग 20–22 साल का एक लड़का अपने कमरे में घुसे एक चोर को पकड़ लेता है। चोर उसका मोबाइल और करीब 1000 रुपए चुराने आया था। 🥶🤡
लेकिन लड़का गुस्सा नहीं करता,वह इस पूरी घटना को मज़ाकिया अंदाज़ में रिकॉर्ड करने लगता है, जैसे कोई न्यूज़ रिपोर्ट कर रहा हो। 🤣🤡
चोर चुपचाप फर्श पर बैठा… pic.twitter.com/LEzxAl71uE
— JIMMY (@Jimmyy__02) March 19, 2026
பிடிபட்ட திருடனைத் தாக்கவோ அல்லது காவல்துறையிடம் ஒப்படைக்கவோ துடிக்காத அந்த இளைஞர், மொத்தச் சம்பவத்தையும் தனது கேமராவில் பதிவு செய்யத் தொடங்கினார். ஒரு செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் (News Reporter) போல, அந்தத் திருடனை அருகில் அமர வைத்துக்கொண்டு மிகவும் கிண்டலான பாணியில் ‘லைவ் ரிப்போர்டிங்’ செய்ய ஆரம்பித்தார். திருடன் தரையில் அமைதியாக அமர்ந்திருக்க, அந்த இளைஞர் நடந்தவற்றை நகைச்சுவையாக விவரித்தது அங்கிருந்த சூழலையே மாற்றியது.
இந்த விசித்திரமான அதேசமயம் வேடிக்கையான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருட வந்த இடத்தில் தர்மசங்கடத்துடன் அமர்ந்திருந்த திருடனும், ஒரு சீரியஸான குற்றச் சம்பவத்தை ஒரு காமெடி சீன் போல மாற்றிய அந்த இளைஞரின் அணுகுமுறையும் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. இந்தச் செய்தி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
