“காலால் எட்டி உதைத்து முகத்தில் கொடூரமாக தாக்கி…” அலறிய பெண்ணை விடாமல் அடித்த வாலிபர்…. உறைய வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஆவணி 8, 2026

Spread the love

இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் என்ன தவறு செய்திருந்தாலும், ஒரு பெண் மீது இப்படி இரக்கமின்றி வன்முறையைப் பிரயோகிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதேவேளையில், இணையத்தில் பிரபலமாவதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலி வீடியோவா அல்லது உண்மையிலேயே நடந்த வன்முறைச் சம்பவமா என்றும் நெட்டிசன்கள் இடையே விவாதம் எழுந்துள்ளது. காரணம் எதுவாக இருப்பினும், பெண்கள் மீது இதுபோன்று கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது காவல்துறையினர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.