பெங்களூருவின் சல்லகட்டா பகுதியில் வசித்து வந்த 61 வயதான ஜெயம்மா என்ற மூதாட்டி, கடந்த ஜூலை 15 முதல் காணாமல் போன நிலையில், ராமோஹள்ளி திம்மப்பா ஏரியில் மிதந்த சிவப்பு நிறப் பெட்டியிலிருந்து அவரது சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கும்புளகோடு காவல் துறையினர், 24 மணி நேரத்திற்குள் தீவிர விசாரணை நடத்தி ககன் (21) என்ற இளைஞரைக் கைது செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் பெரும் கடன் சுமையில் சிக்கியிருந்த அந்த இளைஞர், உறவினரைத் தொடர்புகொள்ளத் தனது வீட்டிற்கு வந்த மூதாட்டியைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரிடமிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் தோடுகளைப் பறித்துக்கொண்டு, சடலத்தைச் சூட்கேஸில் அடைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று ஏரியில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
