“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 6, 2026

Spread the love

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில் வீசிய ஒடிசாவைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பவர்தூம் நிறுவனம் ஒன்றில் ஒடிசாவைச் சேர்ந்த சச்சித் குமார் நரேந்திர பால் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இணைந்து பணியாற்றி வந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட நபர் சச்சித் குமாரிடம் ரூ.30,000 கடன் வாங்கியிருந்த நிலையில், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

   

இந்த ஆத்திரத்தில் சச்சித் குமார் தனது சக ஊழியரைக் கொலை செய்துள்ளார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி காட்லவாடி சந்திப்புக்கு அருகில் உள்ள மயானத்தில் தலையில்லாமல் ஆடையின்றி ஆண் சடலம் கிடப்பதாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர் சச்சித் குமார் நரேந்திர பாலைப் பிடித்து விசாரித்தபோது கொடூர உண்மைகள் வெளிவந்தன.

   

குற்றவாளி அளித்த தகவலின்படி, மயானத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்காபுரி ரயில்வே பாலத்திற்கு அருகில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டது. உடல் மற்றும் தலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கொடூரச் செயலில் ஈடுபட்ட சச்சித் குமாரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.