தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின் ஆட்டோவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான வேமுல மது (28) என்பவர் தனது வளர்ப்பு நாயை அங்கு அழைத்து வந்துள்ளார். அந்த நாய் ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்து, குரைத்ததை ஸ்ரீநாத் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த மது, தனது வீட்டிற்குச் சென்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து ஸ்ரீநாத்தை சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீநாத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கம்மம் போலீசார், தப்பியோடிய கொலையாளி மதுவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
