கணவனைப் பிரிந்து வாழ்ந்த ஆசிரியை.. காதலிக்க வற்புறுத்திய 26 வயது வாலிபர்.. இறுதியில் நடந்த கொடூரம்..!

Spread the love

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் திருமணம் ஆன பூர்ணிமா என்ற 36 வயது பெண் கணவரை பிரிந்து மைசூரில் கிருஷ்ணமூர்த்தி புரத்தில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோல அந்த கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்ற 26 வயது இளைஞர் ஆசிரியை பூர்ணிமாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். அன்று முதல் அவர் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறிய நிலையில் பூர்ணிமா காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் அபிஷேக் அவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தன்னை விட வயது குறைவு என்று கூறி பூர்ணிமா காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அபிஷேக் தன்னை காதலிக்க மறுக்கும் பூர்ணிமா வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று அவரை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் மாலை பூர்ணிமாவை சந்தித்த அபிஷேக் உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன்னை காதலிக்கும்படி கூறி தகராறு செய்த நிலையில் பூர்ணிமா காதலிக்க முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

இதனால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அபிஷேக் பூர்ணிமாவின் வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு அவரே பூர்ணிமாவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மருத்துவமனையில் பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…

2 minutes ago

போடு ரகிட ரகிட… இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…

14 minutes ago

21 வயது பெண்ணின் மாடலிங் ஆசை… Whatsappல் வந்த அந்த ஒரு லிங்க்… சைபர் சைக்கோ செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!

பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…

18 minutes ago

அரசியல் வரலாற்றிலேயே முதல்முறை…. CM விஜய் கையில் எடுத்த புது ஆயுதம்… இனி ஒரு போன் கால் போதும்…. ஷாக்கில் எதிர்க்கட்சிகள்…!

பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…

24 minutes ago

திமுக கூடாரத்தை காலி செய்த கூட்டணிக் கட்சிகள்… ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு ‘தவறான’ முடிவு… உள்ளடி வேலைகளை அம்பலப்படுத்தும் பரபரப்பு ரிப்போர்ட்…!

தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் அவர்கள்…

27 minutes ago

“இது நியாயமே இல்லை”… அத்துமீறிய விமான நிறுவன ஊழியர்… தோனிக்கு நேர்ந்த அநீதி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோவின் பின்னணி…!

மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…

30 minutes ago