“அவ வேறொருத்தனோட ஓடிப்போயிட்டா…” பச்சிளம் குழந்தையின் பசி அழுகை… மருந்தகத்தில் கதறிய ஏழைத் தந்தை… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ….!

Spread the love

சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது அதிவேகமாக வைரலாகி வருகிறது. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் ஓர் ஏழைத் தந்தை, நாள் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது பச்சிளம் குழந்தை பசியால் கதறி அழுதுகொண்டிருந்ததைக் கண்டு பதறிய அவர், மனைவியை வீடு முழுவதும் தேடியுள்ளார். ஆனால், அவரது மனைவி குழந்தையையும் கணவரையும் தவிக்கவிட்டு, வேறொரு இளைஞருடன் திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக வீட்டை விட்டு ஓடிப்போனதாக அக்கம் பக்கத்தினர் கூறிய அதிர்ச்சித் தகவல் அந்தத் தந்தையை நிலைகுலையச் செய்துள்ளது.

தாய்ப்பால் இல்லாமல் பசியால் துடித்த தன் குழந்தையின் உயிரைக் காக்க என்ன செய்வதென்று தெரியாமல், அந்தத் தந்தை உடனடியாக அருகிலிருந்த மருந்தகத்திற்கு ஓடிச் சென்று லாக்டோஜன் பால் பவுடரை வாங்கியுள்ளார். இதற்கு முன்பு குழந்தைக்கு பால் பவுடர் தயாரித்துக் கொடுத்த அனுபவம் இல்லாததால், அங்கிருந்த மருந்தக ஊழியரிடம், “அண்ணே… இதை எப்படி கலக்கி குழந்தைக்கு கொடுக்கணும்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர், “இது உங்க மனைவிக்குத் தெரியுமே, அவங்ககிட்ட கேளுங்க” எனக் கூற, “அவ வேறொருத்தனுடன் ஓடிப்போயிட்டா…” என்று அந்தத் தந்தை உடைந்த குரலில் பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு மருந்தகத்தில் இருந்த ஒட்டுமொத்த கூட்டமும் கண்ணீர் சிந்தியுள்ளது.

இந்த உருக்கமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், பெற்ற குழந்தையை பசியோடு தவிக்கவிட்டுச் சென்ற தாயின் மனிதாபிமானமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதே வேளையில், தாயின் இடத்தையும் சேர்த்து நிரப்பி தன் குழந்தையைக் காப்பாற்றப் போராடும் அந்த ஏழைத் தந்தைக்குப் பலரும் ஆறுதல்களையும் நிதியுதவிகளையும் வழங்க முன்வந்துள்ளனர். இந்த வீடியோ எந்த மாநிலத்தில், யாரால், எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago