“என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்….” ரத்தம் சொட்ட சொட்ட மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் புகுந்த இளைஞர்… தொழிற்சாலையில் நடந்த பயங்கரம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 15, 2026

Spread the love

டெல்லியில் உள்ள பவானா தொழிற்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம் ஊழியர் மீது சக கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையில் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த அந்த இளைஞர், எப்படியோ அங்கிருந்து தப்பியோடி அதே மெட்ரோ ரயிலில் ஏறி டெல்லியின் முக்கியப் பகுதியான ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

உடலில் ரத்தக் காயங்களுடன் மெட்ரோ நிலையத்திற்கு ஓடிவந்த அந்த இளைஞர், தான் பவானா தொழிற்சாலையில் தாக்கப்பட்டது குறித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் அதே மெட்ரோவில் தன்னைப் பின்தொடர்ந்து வந்து பின்னர் தப்பி சென்றதாகவும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, படுகாயமடைந்த அந்தத் தொழிலாளி மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.