“கழுத்தடியில் எலக்ட்ரிக் ஹாட் பேக்…”தூக்கத்திலேயே பிரிந்த வாலிபர் உயிர்… 2 நாட்கள் கழித்து அழுகி கிடந்த உடல்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனே வாட்கான் ஷேரி பகுதியில் உள்ள சோமநாத் நகரில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த 30 வயதான ஐடி எஞ்சினியர் ரோஹன் குபாடி, கழுத்து வலி நிவாரணத்திற்காக எலக்ட்ரிக் ஹாட் வாட்டர் பேக்கை கழுத்தடியில் வைத்துத் தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சாதனத்தில் மின் கசிவு ஏற்பட்டு, தூக்கத்திலேயே மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு நாட்களாக அவர் தொலைபேசி அழைப்புகளை ஏற்காததாலும், பூட்டிய அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் பூட்டைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் உடல் வீங்கி அழுகிய நிலையில் ரோஹன் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலிஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், பழுதுபட்ட எலக்ட்ரிக் சாதனத்தால் மின்சாரம் பாய்ந்து உயிர் பிரிந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.