ஹைதராபாத் கைரதாபாத் சந்திப்பில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, வாகனம் மோதி நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கைரதாபாத் மெட்ரோ தூண் எண் 1167 அருகே விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலுக்கு நடுவே வந்த வாகனம் ஒன்றின் அடியில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிய நபர் ஒருவர், வாகனம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த கொடூர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…